

50 போட்டிகளில் 106 கோல் என்ற லயோனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்தான் பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சோனி கில்கென்னி.
அச்சிறுவன், வெர்ன்போர்ட் ரேஞ்சர்ஸ் என்ற ஜுனியர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறான். பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழ் இச்சிறுவன் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஜுனியர் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சோனி, 12 கோப்பைகளை வென்றுள்ளான். மெஸ்சியின் சாதனையை முறியடிப்பதற்காக சோனி கடுமையான பயிற்சி மேற்கொண்டான் என்று அவனது தந்தை கூறியுள்ளார்.