

இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு என்ற பெயரில் நீக்கப்பட்டுள்ள முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஏனெனில் தேசிய அணியில் இவர் இடம் பெறாததால் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியில் செல்ல மாட்டார். இதனால் அதிரடி பேட்ஸ்மேனான அவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளுமே ஆர்வம் காட்டும். ஐபிஎல் போட்டியில் முத்திரை பதிக்கக் கூடியவர்கள் என்று 16 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பீட்டர்சனும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட் என அனைத்திலும் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்தது. இதையடுத்து ஓய்வு என்ற பெயரில் பீட்டர்சனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியேற்றியது.