

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்று சிபிசிஐடி போலீஸாரிடம் சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். அவரிடம் தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் 2013ம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, "ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் எனது நண்பர். அவர் மூலம் விண்டு தாராசிங் தொடர்பு எனக்கு கிடைத்தது. விண்டு தாராசிங்கிடம் தொலைபேசியில் பேசும்போது விளையாட்டிற்காக பெட்டிங்கில் ஈடுபட்டோம்" என்று குருநாத் மெய்யப்பன் கூறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை நடத்தப் பட்டு கடந்த மாதம் அறிக்கை வெளியானது. அதில், சூதாட்டம் தொடர்பாக காவல் துறையினர் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட விக் ரம் அகர்வால், உத்தம்லால் ஜெயின், பிரசாந்த், ஹரீஷ் பஜாஜ், நர்பத், பிரவீன்குமார், வேதாச்
சலம், சஞ்சய் பாப்னா மற்றும் குருநாத் மெய்யப்பன் ஆகியோ ருக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டது. அதன்படி விக்ரம் அகர்வால் உட்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். குருநாத் மெய்யப்பன் வியாழக்கிழமை மாலையில் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருவதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வரவில்லை. அவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) வந்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.