

லண்டனில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. ஆஸ்திரேலியா ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்திய அணி 7 புள்ளிகளுடன் இறுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
36 வருடங்களாக நடத்தப் பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி வராலாற்றில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது இதுவே முதன் முறையாகும். S