

கொரியாவின் ஜேஜூவில் நடைபெறும் மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சர்ஜூபாலா, சவீட்டி ஆகியோர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தனர்.
கொரியாவில் உள்ள ஜேஜூ தீவில், மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி நடை பெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகளான சர்ஜூபாலா தேவி (48 கிலோ எடைப் பிரிவு) சவீட்டி (81 கிலோ) ஆகிய இருவரும் அவரவர் எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சர்ஜூபாலா, நஸீம் கைஷாய்பேவிடமும் (கஸகஷ்தான்) சவீட்டி, யாங் ஜியோலியிடமும் (சைனா) தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்கள்.