Last Updated : 25 May, 2017 09:56 AM

 

Published : 25 May 2017 09:56 AM
Last Updated : 25 May 2017 09:56 AM

பெடரர், செரீனா, ஷரபோவா இல்லாத பிரெஞ்சு ஓபன் போட்டி: ஆன்டி முர்ரே, ஏஞ்சலிக் கெர்பர் தொடர்ச்சியான தோல்விகளால் அவதி

ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரதான சுற்றுகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. பாரிஸ் நகரில் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர்.

அதேவேளையில் சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இம்முறை இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை. 3-ம் நிலை வீரரான பெடரர், இந்த சீசனில் எழுச்சி கண்டு ஆஸ்தி ரேலிய ஓபனில் பட்டம் வென்றார்.

எனினும் களிமண் தரை ஆடுகள போட்டிகளை இந்த ஆண்டு முழுவதும் அவர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகி உள்ளார். 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், பிரெஞ்சு ஓபனில் சாதித்ததும் குறைவே. இந்த தொடரில் அவர் 2009-ல் மட்டும் கோப்பையை வென்றார்.

அதேவேளையில் மகளிர் பிரிவில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், குழந்தை பிறப்பை எதிர்நோக்கி உள்ளதால் இந்த முறை பிரெஞ்சு ஓபனுக்கு டாடா சொல்லி உள்ளார். ஊக்க மருந்து விவகாரத்தில் தடை காலத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளுக்கு திரும்பி உள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு, பிரெஞ்சு ஓபன் போட்டி அமைப்பாளர்கள் வைல்டு கார்டு வழங்க மறுத்துவிட்டனர்.

2012 மற்றும் 2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைகளில் ஏந்திய ஷரபோவாவுக்கு இது மிகுந்த ஏமாற்றமாக அமைந் துள்ளது. இதற்கிடையே நட்சத்திர அந்தஸ்தை பெற்ற இவர்கள் 3 பேரும் இம்முறை விளையாடாத தால் பிரெஞ்சு ஓபன் தொடர் எந்த வகையிலும் பலவீனம் அடையாது.

இந்த தொடரில் விளையாடு வதை வீரர்கள் பெருமையா கவே கருதுகின்றனர். மேலும் கிராண்ட் ஸ்லாம் போட்டி என்பது டென்னிஸ் வரலாற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது என பிரெஞ்சு ஓபன் வரலாற்று ஆய்வாளர் ஜீன் கிறிஸ்டோப் பிப்யூவ் தெரிவித்துள்ளார்.

நடாலின் 10

களிமண் தரை ஆடுகள ராஜாவாக திகழ்ந்த ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் எழுச்சியுடன் பிரெஞ்சு ஓபனில் களமிறங்க உள்ளார். 30 வயதான நடால் தற்போது தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபனில் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று அசத்தினார். 2015-ல் அவர் கால் இறுதியில் செர்பியாவின் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டார்.

அதில் இருந்து தான் நடாலுக்கு சரிவு ஆரம்பமானது. முன்னதாக நடாலின் தொடர்ச்சியான 39 ஆட்டங் களின் வெற்றிக்கு 2009-ல் சுவீடனின் ராபின் சோடர்லிங் முற்றுப் புள்ளி வைத்திருந்தார். எனினும் அதில் இருந்து அடுத்த ஆண்டே மீண்டு வந்து தொடர்ச்சியாக 5 முறை பிரெஞ்சு ஓபனில் வாகை சூடினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் காயம் காரண மாக 2-வது சுற்றுடன் நடால் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தொடர் தோல்விகள், காயம் காரணமாக அவதிப்பட்ட நடால் தனது பயிற்சி முறைகளில் மாற்றம் கொண்டு வந்தார். இதற்கு வசதியாக தனது குழுவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கார்லோஸ் மோயாவை சேர்த்தார்.

இதற்கு பலனாகவும், தொடர் முயற்சிகளினாலும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டி வரை நடால் கால் பதித்தார். அதைத் தொடர்ந்து மான்டே கார்லோ ஓபனில் 10-வது முறையாக பட்டம் வென்ற நடால், களிமண் தரையில் 50-வது பட்டம் வென்ற ஒரே நபர் எனற சாதனையையும் நிகழ்த்தியிருந்தார்.

இதை தொடர்ந்து பார்சிலோனா, மாட்ரிட் ஓபனிலும் நடால் கோப்பையை வென்றார். இதன் மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற ஜேகோவிச்சின் சாதனையை நடால் சமன் செய்தார். இருவரும் தலா 30 கோப்பைகளை வென்றுள்ளனர்.

கடைசியாக 2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் வாகை சூடிய நடாலிடம் இருந்து அதன் பின்னர் பிரமிக்கத் தகுந்த அளவில் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப் படவில்லை. ஆனால் தற்போது தனது வியூகங்களை மாற்றிக் கொண்டுள்ள அவரிடம் பழைய ஆக்ரோஷமான ஆட்டத்தை காண முடிகிறது. இதனால் 10-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் பிரெஞ்சு ஓபனை எதிர்கொள்ள உள்ளார் நடால்.

ஆன்டி முர்ரே தடுமாற்றம்

2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் கடந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபனை கைப்பற்றியதன் மூலம் கேரியர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஜோகோவிச் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறார்.

29 வயதான ஜோகோவிச் கடந்த நவம்பர்மாதம் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை ஆன்டி முர்ரேவிடம் இழந்தார். அதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது சுற்றுடன் வெளியேறினார்.

கடந்த வாரம் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 19 வயதான இளம் வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவிடம் இறுதிப் போட்டியில் நேர் செட்டில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்தார்.

இந்நிலையில் தோல்விகளில் இருந்து மீண்டு வரும் வகையில் தனது பயிற்சிக்குழுவை அதிரடி யாக மாற்றி உள்ளார் ஜோகோ விச். அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவானான ஆந்த்ரே அகாஸியை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார் ஜோகோவிச்.

கடந்த சீசன் இறுதியில் தனது பயிற்சி குழுவில் இருந்து போரிஸ் பெக்கரை நீக்கியிருந்த ஜோகோவிச், இந்த மாத தொடக் கத்தில் நீண்ட கால பயிற்சி யாளரான மரியன் வஜ்டாவையும் பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 8 முறை சாம்பியன் பட்டம் வென் றுள்ள அகாஸி , கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டி களில் இருந்து ஓய்வு பெற்றார். உயர் மட்ட அளவிலான போட்டி களுக்கு அகாஸி இதுவரை பயிற்சிகள் அளித்ததில்லை. இதனால் அவரிடன் பயிற்சி வியூகங்கள் ஜோகோவிச்சுக்கு எந்த வகையில் உதவும் என்பது தெரிய வில்லை.

முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் இந்த சீசனில் தடுமாற்றம் கண்டு வருகிறார். பார்சிலோனா ஓபன் அரை இறுதியில் 7-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் தோல்வியடைந்த முர்ரே, மாட்ரிட் ஓபனில் 40-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிக்கிடம் வீழ்ந்தார்.

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய முர்ரே, இத்தாலியின் பேபியோ போக்னியிடம் 2-வது சுற்றிலேயே தோல்விகண்டார். கடந்த ஆண்டில் விம்பிள்டன், ஒலிம் பிக்கில் பதக்கம், ஏடிபி டூர் பைனல் ஸில் கோப்பை என 9 பட்டங் களை முர்ரே வென்றிருந்தார்.

ஆனால் இந்த ஆண்டில் தற்போது வரை முர்ரே பெரிய அளவிலான எந்த தொடரிலும் வெற்றி காணவில்லை. கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி வரை முர்ரே முன்னேறி யிருந்தார். அந்த தொடரில் ஜோகோவிச்சிடம் தோல்வி யடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார்.

மேலும் களிமண் தரை ஆடுகளத் தில் முர்ரேவின் சிறப்பான தொடரா கவும் இதுவே அமைந்திருந்தது. ஆனால் இம்முறை தொடர் தோல்வி களால் துவண்டுள்ள அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப் படுமா என்பது தெரியவில்லை.

ஏஞ்சலிக் கெர்பர்

மகளிர் தரவரிசையில் முதலி டத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் இந்த சீசனில் மோசமாகவே விளையாடி வருகிறார். பிரெஞ்சு ஓபனை பொறுத்தவரை அவர் கடந்த 2012-ம் ஆண்டு கால் இறுதிவரை முன்னேறியதே சிறந்த ஆட்டமாக உள்ளது. இந்த சீசனில் மாட்ரிட் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த கெர்பர், ரோம் போட்டியில் முகுதுவலி காரணமாக முதற்கட்ட ஆட்டத்துடன் வெளியேறினார்.

பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பிய னான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா இந்த சீசனில் களிமண் தரை ஆடுகளத்தில் இரு ஆட்டங் களில் மட்டுமே வெற்றி பெற்றுள் ளார். கடந்த வாரம் நடைபெற்ற ரோம் போட்டியில் காயம் காரணமாக வெளியேறியிருந்தார்.

2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் 2-வது இடம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹாலப், இந்த சீசனில் மாட்ரிட் போட்டியில் கோப்பையை வென்றார். மேலும் ரோம் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அவர் நல்ல பார்மில் உள்ளதால் பிரெஞ்சு ஓபனை நம்பிக்கையுடன் எதி ர்கொள்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் கொள்ளைக்காரனிடம் கத்திக்குத்து வாங்கிய செக் குடியரசின் பெட்ரா விட்டோவா காயம் குணமடைந் துள்ள நிலையில் பிரெஞ்சு ஓபனை சந்திக்கிறார். இரு முறை விம்பிள்ட னில் மகுடம் சூடி உள்ள அவர், கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் அரை இறுதி வரை முன்னேறியிருந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x