

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் தேவ் வாட்மோரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியோடு முடிவுக்கு வருகிறது. அதனால் பாகிஸ்தானின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. குறுகிய கால அடிப்படையில் மொயின் கான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது: வாட்மோரின் பதவிக்காலம் முடிந்தவுடன் மொயின் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். அவர் ஆசிய கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளுக்கு பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார். அதன்பிறகு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.-பிடிஐ