Last Updated : 07 Aug, 2016 10:51 AM

 

Published : 07 Aug 2016 10:51 AM
Last Updated : 07 Aug 2016 10:51 AM

ஒலிம்பிக் டென்னிஸ்: பயஸ், சானியா ஜோடிகள் ஏமாற்றம்; தோற்று வெளியேற்றம்

ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பயஸ்-போபன்னா, மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-பிரார்த்தனா ஜோடிகள் தோற்று வெளியேறி இந்தியாவுக்கு கடும் ஏமாற்றம் அளித்துள்ளன.

போலந்து ஜோடியான லூக்காச் கியூபாட், மார்சின் மட்கோவ்ஸ்கி சிறந்த ஆற்றலுடனும் அணுகுமுறையுடனும் ஆடினர். ஒரு மணிநேரத்துக்கு சற்று கூடுதலாகச் சென்ற ஆட்டத்தில் இந்த ஜோடி 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பயஸ்-போபண்ணாவை வெளியேற்றினர்.

43 வயதான பயஸ் கண்களில் நீர்பனிக்க வெளியேறினார்.

இந்த டென்னிஸ் கோர்ட்டில் பந்துகள் கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆனது. நிறைய வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். போலந்து வீரர்களின் சர்வ்களை அடுத்தடுத்து பிரேக் செய்த பயஸ்-போபன்னா, தங்கள் சர்வ் கேம்களில் 3-ஐ இழந்தனர். 10-வது கேமில் பயஸ் 3 முறை தொடர்ச்சியாக தவறிழைத்தார்.

2-வது செட்டில் கொஞ்சம் பரவாயில்லாமல் ஆடிய பயஸ்-போபன்னா பிரேக் பாயிண்ட்களை காப்பாற்றினர். 11-வது கேமில் போலந்து வீரர் கியுபாட் சர்வில் டபுள் பால்ட் செய்ய சர்வை இழக்க நேரிட்டத. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி முன்னேறியிருக்க வேண்டும், ஆனால் போபன்னா தனது முதல் சர்வை உள்ளே போடவேயில்லை. சர்வை இழக்க நேரிட்டது.

டை பிரேக்கரில் பயஸ்-போபன்னா செட் பாயிண்ட் பெற்று 6-5 என்று இருந்தனர். ஆனால் கியூபாட் அடித்த சர்வை ஒன்றுமே செய்ய முடியவில்லை அவர்களுக்கு மேட்ச் பாயிண்ட். கடைசியில் கியூபாட் அடித்த ஷாட்டை எடுக்கும் போது போபன்னா தவறிழைக்க திரை விழுந்தது.

சானியா-பிரார்த்தனா ஜோடி வெளியேற்றம்!

பெண்கள் மகளிர் பிரிவு டென்னிஸிலும் இந்திய அணிக்கு திரை விழுந்தது. சானியா-பிரார்த்தனா ஜோடி, சீனாவின் ஷுகாய் பெங்-ஷுகாய் ஷங் ஜோடியிடம் 6-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி தழுவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x