திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி

திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி
Updated on
1 min read

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் காஞ்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் 48 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த திண்டுக்கல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததது. அதிகபட்சமாக ஜெகதீசன் 44, கங்கா தர் ராஜு 32 ரன்கள் எடுத்தனர். காஞ்சி தரப்பில் ஜேசுராஜ், பார்த்திபன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

2-வது வெற்றி

160 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய காஞ்சி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பார்த்திபன் 20 ரன்கள் எடுத்தார்.

திண்டுக்கல் தரப்பில் கேதார்நாத், முருகன், குமார் சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். திண்டுக்கல் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் மதுரை அணியை திண்டுக்கல் வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளால் 4 புள்ளி களுடன் திண்டுக்கல் அணி பட்டி யலில் முதலிடத்தில் உள்ளது.

தொடரின் 8-வது நாளான நேற்று சேப்பாக்கத்தில் லைகா கோவை கிங்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. தினேஷ் கார்த்திக் இல்லாமல் களமிறங்கிய தூத்துக்குடி அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் வெறும் 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 43, சுஷில் 12, மாருதி ராகவ் 12 ரன்கள் எடுத்தனர். கோவை அணி தரப்பில் சிவகுமார் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதை யடுத்து 96 ரன்கள் இலக்குடன் கோவை அணி பேட் செய்ய தொடங்கியது.

திருநெல்வேலியில்

தொடரின் 9-வது நாளான இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்தியா சிமெண்டஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறு கிறது.

மாலை 6.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த ஆட்டத்தை யொட்டி நடிகை இனியா பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in