முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு
Updated on
1 min read

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

42 வயதாகும் காம்ப்ளி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருதயக் கோளாறுக்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு நன்றாகவே இருந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஓய்வுக்குப் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.சச்சின் டெண்டுல்கரின் மிக நெருங்கிய தோழராக இருந்த அவர் அண்மைக்காலமாக சச்சினுடன் நட்பில் இல்லை என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in