

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது வர்ணனையாளரான கெவின் பீட்டர்சனுக்கும் மனோஜ் திவாரிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் போது ருசிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
தீபக் சாஹர் இன்னிங்சின் 2-வது ஓவரை வீசிய போது முதல் ஸ்லிப்பில் இருந்த மனோஜ் திவாரி மைக்கில் வர்ணனையாளர் பீட்டர்சனுடன் உரையாடினார்.
அப்போது திடீரென கெவின் பீட்டர்சன், மனோஜ் திவாரியிடம் தோனியை விட தான் ஒரு சிறந்த கால்ஃப் வீரர் என்று கூறினார் இதனை எம்.எஸ்.தோனியிடம் தெரிவிக்குமாறு கூறினார்.
உரையாடல் விவரம்:
பீட்டர்சன்: எம்.எஸ். தோனியின் காதில் ‘நான் அவரை விட சிறந்த கால்ஃப் வீரர்’ என்று கூறுங்கள்
மனோஜ் திவாரி: இந்தப் பந்து முடிந்தவுடன் கூறுகிறேன்.
பீட்டர்சன்: நன்றி, இதோ இப்போது வாய்ப்பு வந்துள்ளது தோனியிடம் நான் கூறியதைக் கூறுங்கள்.
மனோஜ் திவாரி தோனியிடம்: கெவின் பீட்டர்சன் தான் உங்களை விட சிறந்த கால்ஃப் வீரர் என்கிறார்.
தோனி (மைக்கில்): அவர்தான் (பீட்டர்சன்) இன்னமும் என் முதல் டெஸ்ட் விக்கெட்
பீட்டர்சன் (சிரிப்பை அடக்க முடியாமல்): அது 3-வது நடுவரிடம் ரெஃபர் செய்தது, அது நாட் அவுட்.
இதன் பிறகு இருவரும் புன்னகையுடன் உரையாடலை முடித்தனர்.