ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா

Published on

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சாய்னா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 24-22, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்வென் ஜெங்கை தோற்கடித்தார். சர்வதேச தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவரான சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் வாங் ஷிக்ஸியானை சந்திக்கிறார். தரவரிசையில் 4-வது

இடத்தில் உள்ள வாங் தனது 2-வது சுற்றில் 21-15, 21-12 என்ற நேர் செட்களில் அயர்லாந்தின் சோலி மேகியைத் தோற்கடித்தார். இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே இந்தியரான சாய்னா, பர்மிங்காமில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக தூங்க முடியாமல் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in