இனிமேல் துப்பாக்கியை தூக்கமாட்டேன்: அபிநவ் பிந்த்ரா அறிவிப்பு

இனிமேல் துப்பாக்கியை தூக்கமாட்டேன்: அபிநவ் பிந்த்ரா அறிவிப்பு
Updated on
1 min read

மீண்டும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டைத் தொடரமாட் டேன். பொழுதுபோக்குக்காக கூட அதன்பக்கம் செல்லமாட்டேன் என்று இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா தெரிவித்தார்.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில் துப்பாக்கி சுடுவதில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் பிந்த்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையும் பிந்த்ரா வசமே உள்ளது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் 4-வது இடத்தில் மட்டுமே வர முடிந்தது.

இந்நிலையில் ஓய்வு முடிவை அறிவித்த அபிநவ் பிந்த்ரா கூறும் போது, " என்னுடைய வேலை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். அதற்காக அமைதியாக காத்திருந்தேன். என்னுடைய எல்லா திறமையையும் பயன்படுத் தினேன். எனக்கு மிகச்சிறப்பான நாளாக அமைந்தது. ஆனால் அதற்கான பலனாக ஒரு பதக்கம் கூட கிடைக்காதது தான் வருத்தம் அளிக்கிறது.

என்னுடைய ஓய்வுக்கு சரியான நேரம் இதுதான். இதை மறுபரிசீ லனை செய்யும் பேச்சுக்கே இட மில்லை. இனி பொழுதுபோக் காக கூட துப்பாக்கியை தூக்க மாட் டேன். ஒலிம்பிக்கில் சாதிக்க என் னால் முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்துவிட் டேன். இப்படி முடிவு கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சிதான்.

அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று இனிமேல்தான் யோசிக்கவேண்டும். ஓய்வு பெறுவது என்பது இறுதியான முடிவு. என்னுடைய துப்பாக் கியை விற்கப் போகிறேன். நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்களா? என்று சற்றே வேடிக்கையாகவும் செய்தியாளர்களிடம் பேசினார் பிந்த்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in