Published : 16 Apr 2017 10:53 AM
Last Updated : 16 Apr 2017 10:53 AM

விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்: சானியா மிர்சா கருத்து

பெண்களுக்கான ‘லேபில் பஜார்’ ஆடை கண்காட்சி, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங் களின் அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.

அதில் பெண்களுக்கான உயர் ரக ஆடைகள், காலணிகள், அணிகலன்கள், கைப்பைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை சானியா மிர்சா தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக சானியா மிர்சா, அவருடைய சகோதரி அனம் மிஸ்ரா மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் பங்கேற்ற ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சானியா மிர்சா கூறியதாவது:

இந்த ஆண்டை வலுவாகவே தொடங்கினேன். கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டியில் விளையாடினேன். பிரிஸ்பன் ஓபனில் பட்டம் வென்றுள்ளேன். இதுதவிர மியாமி, சிட்னி உள்ளிட்ட சில தொடர்களில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தேன்.

சோர்வான நேரங்களில் என்னால் முடியும் என எனக்குள்ளே கூறிக்கொள்வேன். முயன்றவரை அதிக பட்டங்களை வெல்வேன். அது ஒரு பிரச்சினை அல்ல. என்னுடன் புதிதாக ஜோடி சேர்ந்துள்ள கஜகஸ் தானை சேர்ந்த யரோஸ்லவா சிறந்த வீராங்கனை. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

அவர் பேக்ஹன்டில் வலுவான வீராங்கனை. தற்போதைய நிலை யில் விம்பிள்டன் போட்டி வரை நாங்கள் இணைந்து விளையாட முடிவு செய்துள்ளோம். எஞ்சிய சீசனிலும் நாங்கள் இணைந்து விளையாட வாய்ப்பு உள்ளது.

முதலாவதாக நாங்கள் மாட்ரிட் போட்டியை எதிர்கொள்ள உள்ளோம். இதற்காக நான் வரும் 2-ம் தேதி புறப்பட்டு செல்கிறேன். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஒருசில நாட்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட உள்ளேன். பார்போரா ஸ்டிரைகோவாவுடன் சிறப்பாக விளையாடினேன். இது யரோஸ்லவாவுடனும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒற்றையர் பிரிவில் பார்போரா மிகச்சிறந்த வீராங்கனையாக திகழ்கிறார். ஒரே தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாடுவது அவருக்கு கடினமாக உள்ளது. மேலும் எங்களுக்குள் வெவ்வேறு முன்னுரிமைகள் இருந்தது.

வாரத்தில் 8 முதல் 9 ஆட்டங்களில் விளையாடுவதால் அவர் மிகவும் சோர்வடைந்து விடு கிறார். சில காரணங்களால் எங்க ளால் தொடர்ச்சியான வெற்றியை பெற முடியவில்லை. மேலும் முன்னுரிமைகள் எங்களுக்குள் வெவ்வேறாக இருந்ததால் இது தான் சரியான தருணம் என நினைத்து பரஸ்பரமாக பிரிந்துவிட்டோம்.

உடல்ரீதியாக முடியாத காரணத் தினால்தான் நான் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் விளையாடுவதை நிறுத்தினேன். அந்த நேரத்தில் இது கடினமான முடிவுதான். எனினும் அப்போது எடுத்த இந்த முடிவு சிறந்ததாகவே அமைந்தது. இரட்டையர் பிரிவில் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமா கவும் விளையாடி வருகிறேன். தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் நம்பர் ஒன் இடத்தில் இருந்துள் ளேன்.

என்னை சுற்றி ஏராளமான எதிர்மறைத் தன்மை உள்ளது. சமூகவலை தளங்களால் பல ஏற்றங்கள் இருந்ததாலும் சில இறங்கங்களும் உள்ளன. காலத் துக்கு தகுந்தபடி விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தனிநபர் மீதான அவதூறுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x