

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கெனவே முன்னேறி விட்டன. மேலும் இரு அணிகளுக்கும் இந்த சீசனில் இதுதான் கடைசி ஆட்டம். மும்பை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 118 புள்ளிகள் பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கொல்கத்தா அணி 13 ஆட்டத்தில், 8 வெற்றிகள், 5 தோல்வி களுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித் தாலும் அந்த அணி முதலிடத் திலேயே நீடிக்கும். மாறாக கொல்கத்தா அணி தோல்வியடைந் தால் 2-வது இடத்தை இழக்க நேரிடக்கூடும். எனினும் அந்த அணியின் நெட் ரன் ரேட் (+0.729) சிறப்பாகவே உள்ளது.
மும்பை தனது கடைசி இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டுள்ளது. கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் இன்று மாற்றம் இருக்கக்கூடும்.
சுனில் நரேன் அல்லது கிறிஸ் லின் உடன் காம்பீர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே சீராக ரன் குவிக்க தவறுகிறார். இதேபோல் யூசுப் பதானும் மோச மான பார்மில் உள்ளார். அவர் கடைசி 8 ஆட்டங்களில் வெறும் 37 ரன்கள் மட்டுமே சேர்த் துள்ளார்.
ஆல்ரவுண்டரான நியூஸி லாந்தை சேர்ந்த காலின் டி கிராண்ட்ஹோம் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப் படுத்தவில்லை. அவர் இந்த சீசனில் 4 விக்கெட்களும், 97 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இதனால் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் விதமாக முன்னணி வீரர்களில் ஒருவர் (சுனில் நரேன் அல்லது கிறிஸ் லின்) இந்த பேட்டிங் வரிசைக்கு மாற்றப் படக்கூடும். பேட்டிங்கில் சில ஆட்டங்களில் கொல்கத்தா தடுமாற்றம் கண்டாலும் அணியின் பந்து வீச்சு பலமாக உள்ளது. கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சுனில் நரேன் ஆகியோரை கொண்ட கூட்டணி மும்பை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.
மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் இலக்கை எட்டிப் பிடிக்கும் நிலைக்கு சென்று கோட்டை விட்டது. 7 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியை சந்தித்த மும்பை அணி இன்றைய ஆட்டத் திலும் அதிரடியை வெளிப்படுத்த முயற்சிக்கும். பொலார்டு, சிம்மன்ஸ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்
கவுதம் காம்பீர்
ரோஹித் சர்மா
இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கெனவே முன்னேறி விட்டன. மேலும் இரு அணிகளுக்கும் இந்த சீசனில் இதுதான் கடைசி ஆட்டம்.