ஜார்கண்ட் வீரர்களுக்கு உத்வேகமூட்டிய தோனி

ஜார்கண்ட் வீரர்களுக்கு உத்வேகமூட்டிய தோனி
Updated on
1 min read

புச்சி பாபு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணி வீரர்களிடத்தில் நம்பிக்கை அறிவுரையாளராக செயல்பட்ட ஒருநாள் போட்டி அணி இந்திய கேப்டன் தோனி வீரர்களுக்கு உத்வேகமூட்டினார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டு ஜார்கண்ட் மட்டுமல்லாது ஐதராபாத், சத்தீஸ்கர், ரயில்வே, உத்திரப்பிரதேச அணிகள் பங்கேற்கின்றன. இது இன்று முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் நம்பிக்கை அறிவுரையாளராக ஜார்கண்ட் வீரர்களுக்கு தோனி உத்வேகமூட்டியதைப் பற்றி ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலர் ராஜேஷ் வர்மா கூறும்போது, “ராஞ்சியில் கிரிக்கெட் முகாமில் வீரர்களுடன் தோனி இணைந்தார்.

வீரர்கள் தோனியைக் கண்டதும் உற்சாகமடைந்தனர், தொடக்கத்திலிருந்தே அணியுடன் இருப்பதாகத்தான் தோனி திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லியில் அவருக்கு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் ஆகஸ்ட் 12வாக்கில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in