

மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள் பயணத்திற்குப் பிறகு இந்தியா முழுதும் உள்நாட்டுத் தொடர்களில் விளையாடவிருக்கிறது. இதனால் பேட்டிங் பயிற்சியாளராக பிரவீண் ஆம்ரே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜூலை 6-ம் தேதி முதல் மே.இ.தீவுகள் பயணம் தொடங்குகிறது, அந்தத் தொடர் வரை சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள் தொடருக்கு பந்து வீச்சு பயிற்சியாளர் ஒருவரும் அனுப்பப்படப் போவதில்லை.
“அனில் கும்ப்ளே ஒரு மிகச்சிறந்த பவுலர். மேலும் தான் பயிற்சியாளராக இருப்பதால் மே.இ.தீவுகளுக்கு பவுலிங் பயிற்சியாளர் தேவையில்லை என்று அனில் கும்ப்ளே தெரிவித்து விட்டார்” என்று பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே மிட் டே பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.