நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே
Updated on
1 min read

கங்குலி தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் அணி என்றால் அதில் வீரர்கள்தான் முக்கியம் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி நேர்காணலின் போது இல்லை, இதனையடுத்து ரவி சாஸ்திரி கடும் ஏமாற்றமடைந்தார்.

இந்நிலையில் அனில் கும்ப்ளே கூறியதாவது:

ரவி சாஸ்திரியை முதலில் அழைத்து தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். அவர் இந்திய அணியுடன் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஆகவே நான் அல்லது ரவி சாஸ்திரி அல்லது யாரோ ஒருவர் என்பது முக்கியமல்ல, வீரர்களே முக்கியம் அணியே முக்கியம்.

என்னுடைய பார்வையில் நாங்கள் அனைவருமே இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புவர்கள்தான். இந்திய அணி 3 வடிவங்களிலும் சிறந்து விளங்கி ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் கொண்டது என்றே நாங்கள் கருதுகிறோம். முதலில் ரவி இந்தப் பயணத்தில் இருந்தார், தற்போது நான். இதுதான் நான் தெரிவிக்க விரும்புவது. அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் அவரிடம் அருமையான அணி நம்மிடையே உள்ளது என்றேன்.

நாளை வேறொருவர் பயிற்சியாளராகலாம், நான் நிரந்தரமாக இந்தப் பதவியில் இருக்கப் போவதில்லை. வித்தியாசத்தை ஏற்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக திகழ்வதில் பெருமையடைகிறேன்.

இவ்வாறு கூறினார் அனில் கும்ப்ளே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in