

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் இடம் பிடித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
இதில் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறாத சீனியர் வீரர் உமர் அக்மலுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இங்கிலாந்து தொட ருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாமில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடம் உமர்அக்மல் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் வரும் 23, 24-ம் தேதிகளில் துபையிலும், கடைசி போட்டி 27-ம் தேதி அபுதாபியிலும் நடைபெற உள்ளது.
அணிவிவரம் : சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஷர்ஜீல்கான், காலித் லத்தீப், பாபர் அஷாம், உமர் அக்மல், ஷோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், இமாத் வாசிம், ஹசன் அலி, , வகாப் ரியாஸ், முகமது அமீர், சோகைல் தன்வீர், முஹமது நவாஸ், ருமான் ராயிஸ், சாத் நசீம்.