Published : 04 Feb 2017 08:22 PM
Last Updated : 04 Feb 2017 08:22 PM

பிட்ச்கள் எப்படியிருக்குமோ? - பீதியில் ஆஸ்திரேலிய அணி

சமீபமாக இந்தியாவில் வந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் படுதோல்வி கண்டு திரும்பியுள்ள நிலையில் அடுத்ததாக வரும் ஆஸ்திரேலிய அணி இந்தியப் பிட்ச்கள் பற்றிய பீதியில் உள்ளது.

ஸ்பின் பிட்ச்களை எதிர்நோக்கி ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஆஸ்டன் ஆகர், மிட்செல் ஸ்வெப்சன், ஸ்டீவ் ஓ’கீஃப், நேதன் லயன் என்று சுழற்பந்து 5 சுழற்பந்த் ஆயுதங்களுடன் களமிறங்கவுள்ளது.

அந்த அணியின் ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “ஏன் 5 ஸ்பின்னர்களுமே ஆடலாமே?” என்று கூறி சிரித்தார் மேக்ஸ்வெல்.

ஆனால் உடனேயே ‘இது நடக்கப்போவதில்லை’ என்று அவரே கூறினார்.

ட்ரவர் ஹான்ஸ் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டின் கடினமான சவால் காத்திருக்கிறது, வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் இந்தியாவில் வெற்றி பெற முடியும்” என்று ஏற்கெனவே பிட்ச்கள் பற்றிய தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை வென்ற அணி இங்கிலாந்துதான், அதாவது 2012-ம் ஆண்டு, கிரேம் ஸ்வான், மாண்டி பனேசர் இந்திய அணியின் சுழற்பந்து பிட்ச் ஆதிக்கத்தை தங்கள் வசப்படுத்தி தொடரை வென்றனர். மாறாக ஆஸ்திரேலியாவோ ஆசியாவில் தங்கள் கடைசி 9 டெஸ்ட் போட்டிகளையும் இழந்தது. இந்தியாவில் ஆஸ்திரேலியா கடந்த 9 டெஸ்ட் தொடர்களி ஒரு தொடரில் மட்டுமே வென்றுள்ளது.

பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறும்போது, “4 மைதானங்களிலும் பிட்சின் தன்மையை பார்த்த பிறகே அணிச்சேர்க்கை முடிவு எடுக்கப்படும், இதுதான் பொதுவான வழக்கம் என்றாலும் இம்முறை ‘தெரியாத’ ஒரு புலத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் 4-ல் மூன்று மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் இப்போதுதான் நடைபெறப்போகிறது” என்றார்.

மேக்ஸ்வெல் டேரன் லீ மேனின் கவலையைப் பகிர்ந்து கொண்டு, “பிட்ச்கள் எப்படி அமையும் என்று தெரியவில்லை” என்றார் கவலையுடன்.

‘தரம்சலாவில் டி20 ஆடியிருக்கிறேன், அங்கு ஸ்பின் பெரிய அளவில் ஆகும் என்றே நினைக்கிறேன். மற்ற பிட்ச்கள் பற்றி தெரியவில்லை. பெங்களூர் நல்ல பிட்ச்தான் பொதுவாக. சிறிய பவுண்டரிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அது நல்ல பிட்ச். எங்களுக்காக நல்ல பிட்ச்கள் கிடைக்கும் என்றே நாம் நம்புவோமாக!’ என்றார் மேக்ஸ்வெல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x