

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 128 ரன்களும், பிரியஞ்சன் 60 ரன்களும், மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் ஹக் (42), கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மான் (79) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் அனைவரும் வேகமாக வெளியேற 43 ஓவர்களில் 228 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.
61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.