ஜேசன் கில்லஸ்பியின் ஆல்டைம் சிறந்த அணியில் சேவாக், சச்சின்

ஜேசன் கில்லஸ்பியின் ஆல்டைம் சிறந்த அணியில் சேவாக், சச்சின்
Updated on
1 min read

முன்னாள் வீரர்கள் தங்களுக்குப் பிடித்த சிறந்த அணியினை அறிவித்து வருவது புதிய டிரெண்ட் ஆகி வருகிறது, அவ்வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி தனக்கான 11 வீரர்கள் கொண்ட உலக கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளார்.

இந்த அணியில் மேத்யூ ஹெய்டன் தொடக்க வீரர் இவருக்கு உறுதுணையாக விரேந்திர சேவாக் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார், 3-ம் நிலையில் ரிக்கி பாண்டிங், 4-வது நிலையில் பிரையன் லாரா, 5-வது நிலையில் சச்சின் டெண்டுல்கர், பிறகு காலிஸ், கில்கிறிஸ்ட்.

பந்து வீச்சில் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கர்ட்லி ஆம்புரோஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கில்லஸ்பியின் அணி வருமாறு:

மேத்யூ ஹெய்டன், விரேந்திர சேவாக், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், காலீஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கர்ட்லி ஆம்புரோஸ், கிளென் மெக்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in