Published : 20 Mar 2014 10:00 AM
Last Updated : 20 Mar 2014 10:00 AM

உலக ஸ்குவாஷ் ஜோஸ்னா தோல்வி

மலேசியாவில் நடைபெற்று வரும் உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.

சர்வதேச தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள அவர் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ஸை நேற்று எதிர்கொண்டார். இதில் 7-11, 7-11, 11-9, 2-11 என்ற கணக்கில் ஜோஸ்னா தோல்வியடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான தீபிகா பலிக்கல் தகுதி நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் லிசாவை எதிர்கொள்கிறார். இதில் தீபிகா எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-ஏ.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x