தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20: சென்னை அணியின் பெயர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- 3 ரசிகர்களுக்கு பரிசு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20: சென்னை அணியின் பெயர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- 3 ரசிகர்களுக்கு பரிசு
Updated on
1 min read

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிக் கான தென் சென்னை அணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் மற்றும் அணியின் லோகோ வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.3.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த தொடரின் ஆடடங்கள் சென்னை சேப்பாக்கம், நத்தம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள் ளன.

இந்தப் போட்டி யில் தென் சென் னையை மைய மாகக் கொண்ட அணியை தினத்தந்தி குழுமத்தின் மெட்ரோநேஷன் சென்னை டெலிவிஷன் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த அணிக்கு பெயர் சூட்டுதல் மற்றும் லோகோ வடிவமைத்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ என்ற பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொண்ட 11,839 பேரில் மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த கண்ணன், திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அபுபக்கர் ஆகிய மூன்று பேர் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ பெயரை மிகச் சரியாக அனுப்பி இருந்தனர். இந்த மூன்று பேருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

இதே போல் லோகோ வடிவமைப்பு போட்டிக்கு வந்திருந்த 696 லோகோ டிசைன்களில் இருந்து சிறந்த லோகோவை தேர்வு செய்து அதை முழு அளவிலான லோகோவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. லோகோ வடிவமைப்புக்கு உதவிய கோவையைச் சேர்ந்த ஜான்சன் ஆனந்தகுமார் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கோஷமாக ‘பட்டய கெளப்பு’ என்ற வாசகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in