

இந்தியாவின் பிரபல ஹாக்கி வீரரான தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று கோரி பிரதமர் அலுவலகத் துக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவின் பிரபல ஹாக்கி வீரராக இருந்தவர் தயான் சந்த். 1928, 1932, 1936 ஆகிய ஆண்டு களில் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கப் பதக்கம் வெல்ல முக்கிய காரண மாக இவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஹாக்கி ஜாம்பவ னான அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று கோரி பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய விளயாட்டுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், “இந்திய ஹாக்கிக்கு பெருமை சேர்த்துள்ள தயான் சந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று கோரியுள்ளோம்” என்றார்.
சச்சின் டெண்டுல்கருக்கு முன் பாகவே தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “இதுபோன்ற விஷயங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. தயான் சந்தின் சாதனைகளை எந்த விருதாலும் அளவிட முடியாது. அவர் அதற் கெல்லாம் அப்பாற்பட்டவர். இந்தியா விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். விளை யாட்டுத் துறைக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்று நம்புகிறேன். தயான் சந்துக்கு விருது வழங்குவதன் மூலம் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கு புத்துணர்ச்சி அளிக்க முடியும்” என்றார்.