

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயெங்கா தோனி ரசிகர்களின் ஆதரவை தன் பக்கம் மீண்டும் வென்றெடுக்கும் முயற்சியில் புதிய ஒப்பீடு ஒன்றை செய்துள்ளார்.
தோனி குறித்து கோயெங்கா மேற்கொண்ட ஒரு கருத்து தோனி ரசிகர்களிடையே கடும் கோபாவேசத்தைக் கிளப்ப தோனியின் ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் வென்றெடுக்க தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஹர்ஷ் கோயெங்கா.
இது குறித்து தன் ட்விட்டர் பதிவில் ஹர்ஷ் கோயெங்கா பதிவிட்டதில், ஷோலே படத்தின் ஜெய் (அமிதாப்), வீரு (தர்மேந்திரா) போன்ற ஒரு ஜோடியே ஸ்மித்-தோனி இணை என்று புகழ்ந்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு இதோ: உலகின் தனித்துவமான இணைகள் லாரல்-ஹார்டி, ஜெய்-வீரு, ஸ்மித்-தோனி என்று கூறியுள்ளார்.