டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாட்விக் வால்டன் 40 ரன்கள் எடுத்தார்.

125 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அகமது ஷேசாத் 53 ரன்கள் எடுத்தார்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in