டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ரோஹன் போபண்ணா வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்:  ரோஹன் போபண்ணா வெற்றி
Updated on
1 min read

தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மாற்று ஒற்றையர் போட்டியில் ரோஹன் போபண்ணா வெற்றி பெற்றார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவில் இந்தியா, தென் கொரியா இடையேயான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் மாற்று ஒற்றையர் போட்டியில் நேற்று ஆடுவதாக இருந்த இந்திய வீரர் மைனேனி, காயம் காரணமாக விலகினார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ரோஹன் போபண்ணா, தென் கொரியாவின் ஹாங் சங்கை எதிர்த்து ஆடினார். இதில் முதல் செட்டை இழந்த ரோஹன் போபண்ணா, அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 6-4, 6-4 என்ற செட்கணக்கில் ஹாங் சங்கை வீழ்த்தினார். போபண்ணாவின் வெற்றியால் இந்திய அணி 4-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து நடந்த கடைசி போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனும், தென் கொரியாவின் யாங்-கியூ லிம்மும் மோதினர். இப்போட்டியில் யாங்-கியூ லிம் 6-3 5-7 7-6 என்ற செட்கணக்கில் வென்றார். 5 போட்டிகளின் இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in