Published : 18 Sep 2016 02:33 PM
Last Updated : 18 Sep 2016 02:33 PM

மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர்.

சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கார்லோஸ் பிராத்வெய்ட் 4 சிக்சர்களை ஸ்டோக்ஸ் ஓவரில் தொடர்ச்சியாக அடிக்க கோப்பையை வென்றது மே.இ.தீவுகள். மைதான நடத்தைக்காக சாமுவேல்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் ஆட்டம் முடிந்தகையோடு செய்தியாளர்கள் சந்திப்பில் பென் ஸ்டோக்ஸ் குறித்து கூறும்போது, “ஸ்டோக்ஸ் ஒரு பதற்றமான மனிதர், அவர் கற்றுக்கொள்ளவே இல்லை” என்று டென்ஷனை அதிகப்படுத்தினார்.

Firestarter: Me, Cricket and The Heat of the Moment என்ற ஸ்டோக்ஸின் சுயசரிதை நூல் டெய்லி மெய்லில் தொடராக வெளிவருகிறது, அதில் மர்லன் சாமுவேல்ஸ் பற்றி எழுதிய ஸ்டோக்ஸ், “சாமுவேல்ஸ் மரியாதை தெரியாத ஒரு நபர். அவருடன் கிரிக்கெட் களத்தில் ஆடும் எந்த ஒரு வீரரும் இதனை கண்டுகொள்ள முடியும். அதுவும் உலகக்கோப்பை டி20 இறுதியில் எங்களை வீழ்த்திய பிறகு சாமுவேல்ஸின் நடத்தை கிரிக்கெட்டின் மரியாதையைக் கெடுப்பதாகும்.

தனது பேடுகளை அகற்றாமல் நேரே பிரஸ் ரூமுக்குச் சென்று காலைத் தூக்கி மேஜை மீது போடுகிறார். இது என்னவிதமான நடத்தை, பொதுவெளியில் ஒருமனிதர் இப்படியா நடந்து கொள்வது? மேலும் நான் பதற்றமானவன் என்று பேட்டி கொடுக்கிறார், அவரை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்ற எனது எண்ணத்திற்கு அவரது பேட்டி வலுசேர்த்தது. அவர் கிரிக்கெட் ஆட்டத்தை மதிப்பவராக இல்லை.

ஆம்! அவர் அன்று அசாத்தியமான இன்னிங்ஸை ஆடினார், ஆனால் அவர் ஒரு நல்ல வீரர் என்று நான் கூறுவதை அவர் நடத்தை தடுத்து விட்டது.

இறுதிப் போட்டியில் அவரது நடத்தை அவருடன் நான் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. 14/3 என்ற நிலையில் ரன்னர் முனையில் அவர் எந்தவித கவலையுமில்லாமல் நடமாடினார். அப்போது நான் ‘மர்லன் நீங்கள் 14/3 என்று நினைவு படுத்தினேன், அதற்கு அவர், ஷட் தி ஃப...யூ லிட்டில் பிட்ச் என்று காட்டம் காட்டினார்” இவ்வாறு எழுதியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x