Published : 02 Jun 2016 09:15 PM
Last Updated : 02 Jun 2016 09:15 PM

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அட்டவணை

நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் வியாழனன்று அமெரிக்காவில் தொடங்குகின்றன.

இந்த கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிக்கோ, அமெரிக்கா அணிகளும், 'பி' பிரிவில் சிலி, கொலம்பியா, உருகுவே, ஈக்வெடார் அணிகளும், 'சி' பிரிவில் கோஸ்டா ரிகா, ஜமைக்கா, பனாமா, ஹைதி அணிகளும் 'டி' பிரிவில் பராகுவே, பெரு, பொலிவியா, வெனிசுலா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி ஆட்டங்கள் 16, 17, 18-ம் தேதிகளிலும் அரையிறுதி 21 மற்றும் 22-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிகள் 25-ம் தேதி மோதும். சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி ஜூன் 26-ல் நடைபெறுகிறது. சோனி கிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய நேரப்படி போட்டி அட்டவணை:

ஜூன் 4 அமெரிக்கா-கொலம்பியா காலை 7

ஜூன் 5 கோஸ்டா ரிகா-பராகுவேஅதிகாலை 2.30

ஹைதி-பெரு காலை 5

பிரேசில்-ஈக்வெடார் காலை 7.30

ஜூன் 6 ஜமைக்கா-வெனிசுலா அதிகாலை 2.30

மெக்ஸிக்கோ-உருகுவே காலை5.30

ஜூன் 7 பனாமா-பொலிவியா அதிகாலை 4.30

அர்ஜென்டினா-சிலி காலை 7.30

ஜூன் 8 அமெரிக்கா-கோஸ்டா ரிகா காலை 5.30

கொலம்பியா-பராகுவே காலை 8

ஜூன் 9 பிரேசில்-ஹைதி காலை 5

ஈக்வெடார்-பெரு காலை 7.30

ஜூன் 10 உருகுவே-வெனிசுலா காலை 5

மெக்ஸிக்கோ-ஜமைக்கா காலை 7.30

ஜூன் 11 சிலி-பொலிவியா அதிகாலை 4.30

அர்ஜென்டினா-பனாமாகாலை 7

ஜூன் 12 அமெரிக்கா-பராகுவே அதிகாலை 4.30

கொலம்பியா-கோஸ்டா ரிகா காலை 7

ஜூன் 13 ஈக்வெடார்-ஹைதி அதிகாலை 4

பிரேசில்-பெரு காலை 6

ஜூன் 14 மெக்ஸிக்கோ-வெனிசுலா காலை 5.30

உருகுவே-ஜமைக்கா காலை 7.30

ஜூன் 15 சிலி-பனாமா காலை 5.30

அர்ஜென்டினா-பொலிவியா காலை 7.30

ஜூன் 17 முதல் காலிறுதிப்போட்டி காலை 7

ஜூன் 18 2-வது காலிறுதிப்போட்டி காலை 5.30

ஜூன் 19 3-வது காலிறுதிப்போட்டி அதி காலை 4.30

4-வது காலிறுதிப்போட்டி காலை 7.30

ஜூன் 22 முதல் அரையிறுதிப்போட்டி காலை 6.30

ஜூன் 23 2-வது அரையிறுதிப்போட்டி காலை 7.30

ஜூன் 26 3-வது இடத்துக்கான போட்டி காலை 7.30

ஜூன் 27 இறுதிப்போட்டி காலை காலை 7.30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x