

திபா கர்மாகர், லலிதா பாபரை கவுரவிக்க வேண்டும் என சேவக் வலியுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் திபா கர்மாகர் 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதை வென்றார்.
திபாவின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த் துக்கள் தெரிவித்து வருவதுடன், தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவக், மத்திய அரசு திபா கர்மாகருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவக் தனது ‘ட்விட்டர்’ பதிவில், “ஒலிம்பிக்கில் முத்திரை பதித்த திபா கர்மாகர், தடகள வீராங்கனை லலிதா பாபர் ஆகியோரை கவுரவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தடகளத்தில் 36 ஆண்டுக் களுக்குப் பிறகு லலிதா பாபர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார் என்பது குறிப்பிடத்தக்கது.