

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 62 ரன்களை எடுத்த அம்பாத்தி ராயுடு ஒரு நாள் போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
தவன், கோலி ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட ராயுடு 29 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் என்று முன்னாள் தொடக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்து 25 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் எடுத்துள்ளார். தோனிக்கும் 29 இன்னிங்ஸ்களில்தான் 1,000 ரன்கள் என்ற மைல்கல் கூடியது.
2013-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய ராயுடு, அன்று ஹராரேயில் விராட் கோலியும் இவரும் 159 ரன்களை பகிர்ந்து கொண்டு இந்திய வெற்றியை தீர்மானித்தனர். இதில் ராயுடு 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கோலியும் ரெய்னாவும் ஆட்டமிழக்க ராயுடு வெற்றிபெறச் செய்தார்.
இதுவரை 32 போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு 1014 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 48.28. இவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கை 124. மொத்தம் 2 சதங்களையும் 6 அரைசதங்களையும் ராயுடு எடுத்துள்ளார். ராயுடுவின் 2 சதங்கள் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது.