

ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்ப சோனி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ வில் சமீபத்தில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்வு செய்யப்பட வில்லை. இந்நிலை யில் இந்திய ரசிகர்களுக்காக தினமும் சுமார் 1 மணி நேரம் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் சிறப்பு தொகுப்புகளை ஒளிபரப்ப சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த சிறப்பு தொகுப்புகளை சோனி சிக்ஸ் மற்றும் சோனி இஎஸ்பிஎன் சானல்களில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை யில் நடைபெறும் போட்டிகளை ஒரு தொகுப்பாகவும், இரவில் நடை பெறும் போட்டிகளை மற்றொரு தொகுப்பாகவும் சோனி நிறுவனம் வழங்க உள்ளது.