சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: சாய் பிரணீத் சாம்பியன்

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: சாய் பிரணீத் சாம்பியன்
Updated on
1 min read

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களான சாய் பிரணீத்தும், கே.ஸ்ரீகாந்தும் மோதினர். இப்போட்டியில் சாய் பிரணீத், 17—21, 21—17, 21—12 என்ற செட்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 54 நிமிடங்கள் நடைபெற்றது. இது சாய் பிரணீத் வெல்லும் முதலாவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து நிருபர்களிடம் கூறிய சாய் பிரணீத், "நாம் தினசரி ஆடும் ஒருவருடன் இறுதிப் போட்டியில் ஆடி வெற்றி பெறுவது அத்தனை எளிதான காரியமல்ல. இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இந்திய ரசிகர்கள் எனக்கு மிகவும் உற்சாகமளித்தனர்" என்றார்.

நேற்றைய இறுதிப் போட்டியில் மோதிய 2 இந்திய வீரர்களும் கோபிசந்தின் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனையான தாய் சூ, 21-15, 21-15 என்ற நேர் செட்களில் கரோலினா மரினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in