

உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 48-39 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் குரு நானக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது பட்டத்தை மீண்டும் தக்கவைத்தது. இந்தியா தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கபடி அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.2 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு, ரூ.1 கோடி பரிசும் வழங்கப்பட்டது.
முன்னதாக, உலகக் கோப்பை கபடிப் போட்டியில் மகளிர் பிரிவிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.