Last Updated : 17 Feb, 2014 11:55 AM

 

Published : 17 Feb 2014 11:55 AM
Last Updated : 17 Feb 2014 11:55 AM

ஊட்டியில் பயிற்சி நிறைவு: சென்னை திரும்பியது தமிழக அணி

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியினர் ஊட்டியில் ஒரு வார கால பயிற்சியை முடித்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பினர்.

68-வது சந்தோஷ் டிராபிக்கான தென் மண்டல தகுதிச்சுற்றில் தமிழக அணி முதலிடத்தைப் பிடித்து சிலிகுரியில் வரும் 24-ம் தேதி தொடங்கும் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றது.

தென் மண்டல தகுதிச்சுற்றில் தோல்வியை சந்திக்காத தமிழக அணி, பிரதான சுற்றில் பங்கேற்கும் வலுவான அணி களுக்கு நிகராக தயாராவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஊட்டியில் நிலவும் காலநிலையே பிரதான சுற்று நடைபெறவுள்ள மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலும் நிலவும் என்பதாலேயே ஊட்டியில் ஒரு வார கால பயிற்சி முகாம் நடத்த தமிழக அணியின் பயிற்சியாளர் ரஞ்சித் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 10-ம் தேதி பயிற்சியாளர் ரஞ்சித், உதவிப் பயிற்சியாளர்கள் முருகவேந்தன், ராஜீவ் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருடன் 20 பேர் கொண்ட தமிழக அணி சென்னையில் இருந்து ரயில் மூலம் ஊட்டிக்கு சென்றது.

பயிற்சிப் போட்டியில் வெற்றி

கடும் குளிர் நிலவும் ஊட்டி மலைப்பகுதியில் உள்ள வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற ஒரு வார கால பயிற்சி முகாமில் தினந்தோறும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் தமிழக வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 13 மற்றும் 15-ம் தேதிகளில் வெலிங்டன் எம்.ஆர்.சி. அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடிய தமிழகம், முதல் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டி யிலும் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. “ஹை ஆல்டிடியூட்” பகுதியான ஊட்டியில் பயிற்சி மேற்கொண்டது தமிழக வீரர் களுக்கு பலம் சேர்த்திருப்பதோடு, புதிய நம்பிக் கையையும் கொடுத்துள்ளது.

நல்ல அனுபவம்: ரஞ்சித்

இது தொடர்பாக பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கேட்டபோது, “ஒரு வார கால பயிற்சி முகாம் சிறப்பாக அமைந்தது. வீரர்களும் ஊட்டி சூழலுக்கு நன்றாக பொருந்திவிட்டனர். வெலிங்டன் எம்.ஆர்.சி. அணியினரு டனான இரு போட்டியிலும் தமிழக அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைவிட நல்ல அனுபவத்தை வீரர்கள் பெற் றிருக்கிறார்கள்.

ஏனெனில் எம்.ஆர்.சி. அணி வலுவான வீரர்களைக் கொண்ட அணி. அந்த அணியின் வீரர்கள் கடும் சவால் அளித்தபோதும் இரு போட்டிகளிலும் தமிழகம் வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை. இதனால் கடுமையான சவாலையும் சந்திக்கும் ஆற்றலை தமிழக அணியினர் பெற்றிருக்கிறார்கள்.

மொத்ததில் இந்த பயிற்சி முகாம் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதி யுடன் உள்ளனர். அடுத்ததாக 19-ம் தேதி சென்னையில் ஒரு பயிற்சிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அது இன்னும் உறுதியாகவில்லை. அதை முடித்துவிட்டு 20-ம் தேதி சிலிகுரி புறப்படுகிறோம்” என்றார்.

கேப்டன் சுதாகர்

தமிழக கேப்டன் சுதாகர் கூறுகை யில், “பயிற்சி முகாம் மனநிறைவு அளிக்கிறது. பயிற்சி முகாமில் அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்பட்டு பயிற்சி போட்டிகளில் வெற்றி கண்டி ருக்கிறோம். இதேபோன்று சிலிகுரியில் நடைபெறவுள்ள பிரதான சுற்றிலும் சிறப்பாக ஆட முயற்சிப்போம்” என்றார்.

வீரர்கள் நம்பிக்கை

மற்ற வீரர்கள் கூறுகையில், “இந்த பயிற்சி முகாம் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. தென் மண்ட தகுதிச்சுற்றில் விளையாடியதைப் போன்று முழுமூச்சுடன் ஆடும் பட்சத்தில் வெற்றி பெற முடியும். பிரதான சுற்றில் பஞ்சாப் போன்ற அணிகள் இருந்தாலும் அவர்களுக்கு நிகராக ஆடுவோம். தமிழக அணியும் வலுவான அணிதான்” என்றனர் நம்பிக்கையோடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x