

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெலாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 20-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் நிரோஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் பாக்னர் பந்தை ஸ்கூப் செய்தார். பந்து தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் டிம் பெயினிடம் தஞ்சம் அடைந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் முறையீடு செய்ய நடுவர் அவுட் கொடுத்தார்.
இதனால் கோபம் அடைந்த டிக்வெல்லா தரையில் தனது காலை கோபத்தில் உதைத்து விட்டு, தோள்பட்டையை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந் தார். ஐசிசி விதிமுறைப்படி இவரது செயல்பாடு நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படியாக அமைந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி, நிரோஷன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு குறுகிய வடிவிலான போட்டிகளில் 2 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமும் விதித்துள் ளது. தடையால் நிரோஷன் டிக்வெலா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் டி20 ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.