

தமிழகத்தில் இருக்கும் அங்கீகாரமுள்ள 30 விளையாட்டு சங்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் (டிஎன்ஓஏ).
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்கள் பற்றியும், அதனால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் ‘தி இந்து’வில் செய்தி வெளியாகியிருந்தது. | படிக்க:>அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்கள் | அது தொடர்பாக டிஎன்ஓஏ தரப்பு கருத்தை கேட்டபோது, அங்கீகாரமுள்ள சங்கங்களின் பட்டியலை வெளியிடுவதாக அதன் பொருளாளர் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற 30 சங்கங்களின் பட்டியலை அவர் தந்துள்ளார். அதில் பாட்மிண்டன், சைக்கிளிங் சங்கங்களின் தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒலிம்பிக் சங்கத்துக்கு அளிக்கப்படவில்லை.
மேலும் அங்கீகாரமுள்ள விளையாட்டு சங்கங்களின் பட்டியல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (>www.tnoa.in) பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றும் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அங்கீரிக்கப்பட்ட சங்கங்களின் அனுமதியோடு நடைபெறும் போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மட்டுமே கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான கலந்தாய்வின்போது கணக்கில் கொள்ளப்படும். எனவே தமிழக விளையாட்டு வீரர்கள் ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக அந்தப் போட்டி தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களின் ஆதரவோடுதான் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் விவரம்:
தமிழ்நாடு தடகள சங்கம்
தலைவர்-தேவாரம் ஐபிஎஸ், செயலாளர்- டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ்.
முகவரி: தமிழ்நாடு தடகள சங்கம், எண்.81, ஜவஹர்லால் நேரு மைதானம், சென்னை-600 003. தொலைபேசி எண்: 044-25360202, 25360203.
தமிழ்நாடு நீச்சல் (அக்வாட்டிக்) சங்கம்
தலைவர்-ராம்கோபால் நாராயணன், செயலாளர்- ஜெயராமன்.
முகவரி: எண்.8, எஸ்டிஏடி நீச்சல் காம்ப்ளக்ஸ், வேளச்சேரி, சென்னை-600032, தொலைபேசி எண்-98400 85552.
தமிழ்நாடு வில்வித்தை சங்கம்
தலைவர்-பாலசுப்பிரமணிய ஆதித்யன், செயலாளர்-ஷிஹான் ஹுசைனி. முகவரி: டி16/2, கோஸ்டல் ரோடு, கலாஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-600 090, தொலைபேசி எண்-044-24917744.
தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கம்
தலைவர் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. செயலாளர்-அசோக் பஜாஜ், முகவரி மற்றும் தொலைபேசி எண் இல்லை. இ-மெயில் முகவரி: top1951@gmail.com.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம்
தலைவர்-சிதம்பர சூர்யவேலு, செயலாளர்-இளங்கோவன்.
முகவரி: எண்-3, ராமச்சந்திரன் ஐயர் தெரு, தி.நகர், சென்னை-17, தொலைபேசி எண்-044-24962979.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம்
தலைவர்-பொன் பாஸ்கரன், செயலாளர்-நாகராஜன்.
முகவரி: எண்.79, ஜவஹர்லால் நேரு மைதானம், சென்னை-3, தொலைபேசி எண்-98840 98884.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம்
தலைவர் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. செயலாளர்- ராதாகிருஷ்ணன். முகவரி: எண்.9, லட்சுமண் நகர், பேப்பர் மில்ஸ் ரோடு, பெரவள்ளூர், சென்னை-82, தொலைபேசி எண்-044-26713008.
தமிழ்நாடு கால்பந்து சங்கம்
தலைவர்- ஜேசையா வில்லவராயர், செயலாளர்- ரவிக்குமார் டேவிட். முகவரி: எண்.73, ஜவஹர்லால் நேரு மைதானம், சென்னை-03, தொலைபேசி எண்-98400 25402.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம்
தலைவர்-செந்தமிழன் எம்.எல்.ஏ., செயலாளர்- புஷ்பராஜ்.
முகவரி: எண்.8/79, நெடுஞ்
செழியன் சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78, தொலைபேசி எண்-98846 74558, 98847 11198.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு
தலைவர்-ராதாகிருஷ்ணன், செயலாளர்-ரேணுகாலட்சுமி. முகவரி: எண்.29/14, கற்பகாம்பாள் அபார்ட்மென்ட், 2-வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை-28, தொலைபேசி எண்-94442 48410.
தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம்
தலைவர்- ராமசுப்பிரமணி ஐபிஎஸ், செயலாளர் -சரவணன். முகவரி: எஸ்டிஏடி பல்நோக்கு உள்
விளையாட்டரங்கம், சென்னை-3, தொலைபேசி எண்-99625 23422.
தமிழ்நாடு ஜூடோ சங்கம்
தலைவர்-விஜய முரளி மோகன், செயலாளர்- சென்சாய் ஆர்.சதீஷ்குமார். முகவரி: எண்-1, கற்பகக்கன்னியம்மன் கோவில் 3-வது தெரு, திருவல்லிக்கேனி, சென்னை-5, தொலைபேசி எண்-98402 75891, 98413 11663.
தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம்
தலைவர்-ராமச்சந்திரன், செயலாளர்- ஸ்ரீவத்சவ் சுப்ரமணியம். முகவரி: கிவ்ராஜ் காம்ப்ளக்ஸ் 2, 2-வது தளம், 480, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. தொலைபேசி எண்-044-28520482.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம்
தலைவர்-வேல்முருகன், செயலாளர்-விஜயரங்கம், எண்.82, ஜவஹர்லால் நேரு மைதானம், சென்னை-03, தொலைபேசி எண்-044-24974003.
தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம்
தலைவர்-ஐசரி கே.கணேஷ், செயலாளர்-செல்வமணி. முகவரி: எண்.521/2, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, தொலை
பேசி எண்-044-24315541, 94434 96302.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம்
தலைவர்-அழகப்பன், செய
லாளர்-சி.பி.என்.ரெட்டி. முகவரி: எஸ்டிஏடி டென்னிஸ் மைதானம், லேக் ஏரியா, நுங்கம்பாக்கம், சென்னை-34, தொலைபேசி எண்-044-28175620, 28170381.
தமிழ்நாடு டிரையத்லான் சங்கம்
தலைவர்-சுரேகா ராமச்சந்திரன், செயலாளர்-ராஜேந்திரன். முகவரி: கிவ்ராஜ் காம்ப்ளக்ஸ் 2, 2-வது தளம், 480, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. தொலைபேசி எண்-044-28520482, 98410 13500.
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம்
தலைவர்-வாசுதேவன், செயலாளர்-சித்திரைப் பாண்டியன், எண்.74, ஜவஹர்லால் நேரு மைதானம், சென்னை-3, தொலைபேசி எண்-94440 54355.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி சங்கம்
தலைவர்-சோலை எம்.ராஜா, செயலாளர்-சஃபியுல்லா. முகவரி: 455-ஏ, குலிக்காடு, அய்யம்பாளையம் ரோடு, கே.என்.பி.காலனி (போஸ்ட்), கே.செட்டிபாளையம், திருப்பூர்-608, தொலைபேசி எண்-99444 42886.
தமிழ்நாடு மாநில கோ-கோ சங்கம்
தலைவர்-ஜெயக்குமார், செயலாளர்-அப்பாவு பாண்டியன். முகவரி: 37 பி, ஸ்ரீஅபார்ட்மென்ட், எண்.21, அஜீஸ் நகர் மெயின் ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24. தொலைபேசி எண்-93810
50859.
தமிழ்நாடு மாநில நெட்பால் சங்கம்
தலைவர்-பாரி, செயலாளர்-ராஜ் திருவேங்கடம். முகவரி: எண்.35, மாசிலாமணி தெரு, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை-14, தொலைபேசி எண்-98414 28081.
தமிழ்நாடு அமெச்சூர் ரோவிங் (துடுப்பு படகு) சங்கம்
தலைவர்-சாக்கோ, செயலாளர்-சஞ்சய் ஜெயராஜ், 11, டிசில்வா ரோடு, மயிலாப்பூர், சென்னை-04, தொலைபேசி எண்-98848
72649.
தமிழ்நாடு செயிலிங் (பாய்மர படகு) சங்கம்
தலைவர் அசோக் ஆர்.தாக்கர், செயலாளர்-நில்மா வி.ஷா. முகவரி: ஷா கார்னர், 64, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, மதுரவாயல், சென்னை-95. தொலைபேசி எண்-044-25954508, 98400 99094
தமிழ்நாடு செபக்தாக்ரா சங்கம்
தலைவர்-பொத்தையா, செயலாளர்-பாலமுருகன். முகவரி: எண்-190-ஜி, காந்தி நகர், ஐசிஎப், சென்னை-38, தொலைபேசி எண்-98418 28009.
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம்
தலைவர்-சீதாராமராவ், செயலாளர்-ரவிகிருஷ்ணன், எண்-60, 3-வது குறுக்கு தெரு, கஸ்தூர்பா நகர், அடையார், சென்னை-20. தொலைபேசி எண்-98410 68408.
தமிழ்நாடு பளுதூக்குதல் சங்கம்
தலைவர்-எத்திராஜ், செயலாளர்-நவராஜ் பல்கேனின் டேனியல். முகவரி: எண்.6/3ஏ, முகப்பேர் மேற்கு, சென்னை-37, தொலைபேசி எண்-94433 24235.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் மல்யுத்த சங்கம்
தலைவர் சிவசங்கர், செயலாளர்-கலரி பி.செல்வராஜ், எண்.117, இனாம் செட்டிகுளம் தெரு, ராஜபாளையம்-626117. தொலைபேசி எண்-044-24315541.
தமிழ்நாடு ஊஷூ சங்கம்
தலைவர்-ராஜசேகர், செயலாளர்-கணேசன், எண்.4, நாகவல்லி அம்மன் தெரு, அன்னை சத்யா நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600102, தொலைபேசி எண்-98401 33711.
தி தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சங்கம்
தலைவர்-ஸ்ரீனிவாஸ், செயலாளர்-மதுசூதனன். முகவரி: எண்.318, ராஜ் காம்ப்ளக்ஸ், அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. தொலைபேசி எண்-044-28353801.
தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன்
தலைவர்-ராஜ் சத்யன், செயலாளர் செந்தில் தியாகராஜன், 78/2, நாயுடு தெரு, கோட்டூர், சென்னை-85, தொலைபேசி எண்-044-24471432.