

ஐ.டி.எப். ஆண்கள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் ஐ.டி.எப். ஆண்கள் ஒற்றையர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதனும் (19), கொரியாவைச் சேர்ந்த டக் ஹீ லீ-யும் மோதினர்.
இதில் 3-6, 7-6 (6), 6-4 என்ற செட் கணக்கில் ராம்குமார் வெற்றி பெற்றார்.
இந்தப் பட்டத்தை இவர் முதல்முறையாக வென்றுள்ளார்.
ஐடிஎப் சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதன் மூலம் சென்னை ஓபன் டென்னிஸில் பங்கேற்கும் வாய்ப்பை ராம்குமார் பெற்றுள்ளார்.
வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் ராம்குமார் பேசியது:
சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில் எனது பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், வழிகாட்டியவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து கம்போடியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளேன் என்றார்.