

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற் கிடையே ஆடுகளத்தில் வெடிப் புகள் காணப்படுவதால் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள் ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுழல் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது போன்று இந்த தொடருக்கும் அமைக்கப்படக் கூடும் என கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி யின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கான்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உள்நாட்டில் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டம்தான் இது. உங்களது முதல் கேள்வியும், கடைசி கேள்வியும் ஆடுகளத்தை பற்றியே இருக்கும் என்பது எனக்கு தெரியும். நாங்கள் யாருமே சுழலுக்கு சாதகமான ஆடு களத்தை அமைக்க கோரவில்லை. நாங்கள், எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்துடன்தான் போட்டி யில் நுழைகிறோம். மேற்கிந்தியத் தீவுகளில் சிறப்பாக செயல் பட்டதை உள்நாட்டு தொடரிலும் தொடருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் பந்து வீசப்பட் டதுமே சுழல் தொடர்பாக எல்லோருக்கும் கருத்துகள் எழத்தொடங்கிவிடும்.
ஆனால் ஒரு பயிற்சியாளராக நான் அதுபோன்ற கருதமாட்டேன். திட்டங்களை தயார் செய்து ஆட்டத்தை கொண்டு செல்வோம்.
என்னை பொறுத்தவரையில் கான்பூர் ஆடுகளம் வித்தியாச மானது. அதிகளவு மழை பெய்துள்ளது. ஆடுகளத்தின் மேற்பரப்பு பிற்பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மேற்பரப்பு சிறப்பாகவே உள்ளது. கிரிக்கெட்டை ஆடுகளத்தின் மீது விளையாடுகிறோம். அதுதொடர் பாகவே பேச்சுகளே இருக்க வேண்டும். வெறும் ஆடுகளத்தை வைத்து அல்ல. அணியின் ஆலோ சனை கூட்டத்திலும் இதைதான் நாங்கள் ஆலோசித்தோம். எந்த ஆடுகளம் வழங்கப்பட்டாலும் நாங்கள் அதனை தகவமைத் துக்கொண்டு விளையாடுவோம்.
நியூஸிலாந்து அணி உள் நாட்டில் மட்டும் அல்ல வெளி நாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் களான இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர், கிரெய்க் ஆகியோர் ஒருவரில் இருந்து ஒருவர் மாறுபட்ட கோணத்தில் வீசக்கூடியவர்கள். அவர்களில் இருவரது செயல்பாடுகளை டி 20 உலகக் கோப்பையில் நான் பார்த்துள்ளேன். அந்த தொடரில் அவர்களது பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
பிற அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதை பார்க்கும் போது மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என உற்சாகம் கிடைக்கும். எங்களது எதிரணியை நாங்கள் மதிக்கிறோம். இது சுழற்பந்து வீச்சை மட்டும் வைத்து அல்ல, அனைத்து துறைகளையும் சேர்த்துதான். நியூஸிலாந்து அணியில் உள்ள சுழற்பந்து வீச்சு வித்தியாசங்களை போன்று மற்ற வெளிநாட்டு அணிகளில் காணமுடியாது.
இங்குள்ள சூழ்நிலைகள் இந்திய அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அணிகளுக்கு இந்த பிரச்சினை நீண்ட நாட்களுக்கு இருக்காது. நியூஸிலாந்து வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். அதனால் சூழ்நிலைக்கு தகுந்தபடி எப்படி தகவமமைத்துக்கொள்வது என்பது அவர்களுக்கு தெரியும்.
இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.