

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்பெறவில்லை.
அதே போல் காயமடைந்த வெர்னன் பிலாண்டருக்கும் அணியில் இடமில்லை.
ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்கெல், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஏ.பி.டிவில்லியர்ஸ் கேப்டனாக நீடிப்பார்.
பவுலிங் ஆல்ரவுண்டர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் ஆண்டைல் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ் ஆகியோர் அணியில் உள்ளனர். அபாய வீச்சாளர் ரபாதாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:
ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக், டுபிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஃபர்ஹான் பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், ஆண்டைல் பெலுக்வயோ, கேகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், டிவைன் பிரிடோரியஸ், கேஷவ் மஹராஜ், மோர்னி மோர்கெல்.