Last Updated : 03 Oct, 2014 04:28 PM

 

Published : 03 Oct 2014 04:28 PM
Last Updated : 03 Oct 2014 04:28 PM

வெண்கலப்பதக்கத்தை கொரிய வீராங்கனையிடம் கொடுத்தது ஏன்? - சரிதா தேவி விளக்கம்

இன்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு நடுவரால் அநீதி இழைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப்பதக்கத்தை பதக்கமளிப்பு விழா மேடையில் கொரிய விராங்கனை ஜினா பார்க்கிடமே அளித்தார். அவ்வாறு தன் செய்யக் காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார்:

"பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் நான் அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம், என்னால் அடக்கி வைக்க முடியவில்லை. நான் கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிடம் ஏன் வெண்கலப்பதக்கத்தை அளித்தேன் என்றால் அந்தப் பதக்கத்திற்குத்தான் அவர் தகுதி. எனக்கு வெண்கலத்தை விட சிறப்பான தகுதி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்... கருதினேன். அவர் என்னிடம் மீண்டும் வெண்கலப்பதக்கத்தை திருப்பி அளித்தார். ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனக்கு அவர் மீது கோபமில்லை. அவரும் என்னைப் போல் ஒரு வீரர் அவ்வளவே. எனக்கு தவறு இழைத்தது மற்றவர்களே ஆகவே அது அவரது தனிப்பட்ட தவறல்ல”.

மன்னிப்பு கேட்டது ஏன்?

நான் மன்னிப்பு கேட்ட காரணம், என்னால் மற்ற குத்துச் சண்டை வீரர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான். நான் எனது நாட்டிற்காக விளையாடுகிறேன், என்னால் மற்ற வீரர்கள் பாதிக்கப்படக் கூடாது, ஆனால் எனக்கு தவறிழைக்கப்பட்டது என்று நான் உணர்கிறேன்.

முன்னதாக குத்துச் சண்டை கூட்டமைப்பு எங்களை கைவிட்டது, இப்போது புதிதான ஒன்றினால் மற்ற வீரர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே எனது அக்கறையாக இருந்தது.

கொரியாவில் நடக்கும் உலக குத்துச் சண்டை சாம்பியன் போட்டிகள்:

"நவம்பர் 13 முதல் 25ஆம் தேதி வரை கொரியாவில் உலகக் குத்துச் சண்டை சாம்பியன் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போது எனக்கு இழைக்கப்பட்ட அந்தத் தவறு மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் எதிர்ப்பு காட்டினேன்.

மேலும் எதிர்ப்பு காட்டியதன் மூலம் உலக சாம்பியன் போட்டிகளின் போது நடுவர் தீர்ப்புகளின் தரம் மேலும் உயர்வடையும் என்று நான் நம்புகிறேன். எனக்கு ஏற்பட்டது எந்த ஒரு வீரருக்கும் ஏற்படக்கூடாது. ஏனெனில் நாங்கள் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். ஆகவே இன்னொரு முறை மற்றொரு குத்துச் சண்டை வீரருக்கு எனக்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டு விடக்கூடாது.”

இவ்வாறு கூறியுள்ளார் சரிதா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x