

இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டித் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் சோன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரிஸ் நடைபெற்று வருகிறது.
இன்று (சனிக்கிழமை) நடந்த ஆடவருக்கான ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும், தென் கொரியாவின் சோன் வான் ஹோவும் மோதினர்.
இதில் 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் சோன் வான் ஹோவை வீழ்த்திய ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிராணாயும், ஜப்பான் வீரர் சகாயும் மோதினர். இதில் 21-17, 26-28, 18-21 என்ற செட் கணக்கில் பிரணாய் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.