

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி யதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நுவன் குலசேகரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள் ளார்.
இலங்கையின் கண்டி நகரி லிருந்து தலைநகரான கொழும் புவுக்கு சென்று கொண்டிருந்த குலசேகராவின் கார் மீது, எதிர் திசையில் வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக குலசேகரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது விபத்தை நான் ஏற்படுத்தவில்லை எனவும் பைக் ஓட்டி வந்தவர்தான் தனது காரில் மோதியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து குலசேகராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
34 வயதான குலசேகரா கடந்த ஜூன் மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கை அணிக்காக ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.