

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது. தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகமும் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த போட்டியை கல்வி நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மின்னொளியில் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி நவ. 2-ல் நடைபெறுகிறது.