

ஐபிஎல் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணியை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.
சென்னையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புனே அணி வங்கி உத்தரவாத தொகையான 170 கோடியை செலுத்தாததால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அதனை நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சஹாரா நிறுவனத்தால் ரூபாய். 1702 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி வாங்கப்பட்டது எனவே புனே அணி நீக்கம் பிசிசிஐ-க்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.