வங்கதேசத்திடம் தோல்வி: இலங்கை கிரிக்கெட் இறந்ததாக இரங்கல் செய்தி வெளியிட்டு கேலி

வங்கதேசத்திடம் தோல்வி: இலங்கை கிரிக்கெட் இறந்ததாக இரங்கல் செய்தி வெளியிட்டு கேலி
Updated on
1 min read

கொழும்பு மைதானத்தில் வங்கதேசத்திடம் டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் இறந்து விட்டதாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது இலங்கை நாளேடு தி ஐலண்ட்.

அந்தச் செய்தியில் “RIP Srilanka” என்று தலைப்பிட்டு, ‘மார்ச் 19-ம் தேதி சரா ஓவல் மைதானத்தில் மரணமடைந்த இலங்கை கிரிக்கெட் குறித்த உணர்ச்சிகரமான நினைவுகளுடன்... உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் வங்கதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்று கடுமையாக எழுதியுள்ளது.

வங்கதேச அணி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது, இதில் முதல் டெஸ்ட் போட்டியை 259 ரன்கள் வித்தியாசத்தில் இழந்த வங்கதேசம், தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில், தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடி இலங்கையை அதிர்ச்சித் தோல்வியுறச்செய்து, தொடரைச் சமன் செய்தது. இது வரலாற்று வெற்றி என்பதால் வங்கதேசம் இந்த வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் அணிக்கு திருப்பு முனை ஏற்படுத்தும் வெற்றியாகக் கருதி கொண்டாடியது.

ஆனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அணி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் நிலையில் ஆங்கில நாளேடு இவ்வாறு இரங்கல் செய்தி வெளியிட்டு கேலி செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in