

இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழந்தது.
இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியா பின்தள்ளப்பட்டது. அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் 319 ரன்கள் எடுத்து சாதனை படைத்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இருபது ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி பெற்றுள்ள அதிகபட்ச முன்னேற்றம் இது.
பேட்டிங்கில் முதல் பந்து வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. அவர் 10-வது இடத்தில் உள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகளின் சாமுவேல் பத்ரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.