டி20 கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி

டி20 கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
Updated on
1 min read

மேற்கு வங்கத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏ பிரிவு போட்டியில் தமிழக அணி, மேற்கு வங்க அணியை எதிர்த்து ஆடியது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. அபினவ் முகுந்த் 41 ரன்களையும், அந்தோணி தாஸ் 28 ரன்களையும் எடுத்தனர். மேற்கு வங்க அணியில் பிரதாப் சிங் 3 விக்கெட்களையும், முகமது ஷமி, ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய மேற்கு வங்க அணி 15.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணியில் ஆர்.எஸ்.ஷா 12 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

கட்டாக்கில் நடந்த மற்றொரு போட்டியில் கர்நாடக அணி மும்பை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 162 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in