இந்தியாவுக்கு எதிரான சாதனையை தக்கவைத்துக்கொள்ள முயல்வோம்: பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து

இந்தியாவுக்கு எதிரான சாதனையை தக்கவைத்துக்கொள்ள முயல்வோம்: பாக். கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து
Updated on
1 min read

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 4-ம் தேதி இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு ஆட்டத்தில் வென்றது கிடையாது.

இதுவரை மோதியுள்ள 11 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஆட்டத்தில் இரு வெற்றிகளை பதிவு செய் துள்ளது.

இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதாவது:

மற்ற தொடர்களை விட சாம்பி யன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராக சிறந்த சா தனையை நாங்கள் கொண்டுள் ளோம். அதை அப்படியே நாங்கள் தொடர விரும்புகிறோம். எங்களிடம் இழக்க எதுவும் இல்லை. இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு நல்ல தொடரை நாங்கள் விளையாடி உள்ளோம். இந்த தொடரில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடரை நாங்கள் வெல்ல விரும்புகிறோம்.

இது எங்களுக்கு உற்சாகமான நேரம். எட்ஜ்பஸ்டனில் நாங்கள் அதிகளவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். தொடருக்கு முழு அளவில் தயாராக உள்ளோம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் எங்களது பீல்டிங்கில் முன்னேற்றம் இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தவித ஆச்சர்யமான அம்சங் களையும் நாங்கள் காணவில்லை. சுதந்திரமாக விளையாடவே இங்கு வந்துள்ளோம். அதனை இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தொடங்குவோம். பயிற்சி ஆட்டங்களின் மூலம் எங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்

கேப்டனாக நான் எதிர் கொள்ளும் பெரிய அளவிலான தொடர் இது. மிகுந்த நம்பிக்கை யுடனும், ஆவலுடனும் இந்த தொடரை எதிர்கொள்கிறேன். எனது நோக்கமே இயல்பான ஆட்டத்தை விளையாடுவதுதான், நெருக்கடி யாக விளையாடுவது இல்லை. உள்ளூர் போட்டிகளில் எப்படி இயல்பாக விளையாடுவேனோ அதேபோன்றே விளையாட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in